மாமாவுடன் உல்லாசமாக இருந்த அம்மா..! நேரில் பார்த்த 5 வயது மகனுக்கு ஏற்பட்ட பயங்கரம்! தகாத உறவால் நேர்ந்த விபரீதம்!

தாயொருவர் பெற்றெடுத்த மகனையே கள்ளக்காதலனுடன் இணைந்து கொலை செய்துள்ள சம்பவமானது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி அருகே குச்சம்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஆனந்தஜோதி என்ற பெண் வசித்து வந்தார். இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ராம்குமாரின் வயது 28. ராம்குமார் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். ஆனந்தஜோதி விருதுநகரில் வேலை பார்த்து வருகிறார். இத்தம்பதியினருக்கு ஜீவா என்ற 5 வயது மகனும் லாவண்யா என்ற 3 வயது மகளும் உள்ளனர்.

இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் அங்கன்வாடியில் பயின்று வந்த ஜீவா, பேச்சு மூச்சின்றி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளான். உடனடியாக அவரை உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மகனின் மரணத்தில் சந்தேகமிருப்பதை உணர்ந்த தந்தை காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் ஆணந்தஜோதியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் பல திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்டுள்ளார். அதாவது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மருதுபாண்டி என்ற இளைஞருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறியுள்ளார். மேலும், சில நாட்களுக்கு முன்னர் இருவரும் தனிமையில் இருந்ததை ஜீவா பார்த்துள்ளான்.

எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் கள்ளக்காதலனின் தூண்டுதலின் படி தூங்கிக்கொண்டிருந்த ஜீவாவின் முகத்தில் தலையணை வைத்து பொத்தி, கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக ஆனந்தஜோதி ஒப்புக்கொண்டார். வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் ஆனந்தஜோதி மற்றும் மருதுபாண்டி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.