காதலனுடன் லாட்ஜில் தனிமையில் இருந்த மகள்..! மறுநாள் சடலமாக மீட்கப்பட்ட தாய்..! பெரம்பலூரை உலுக்கிய சம்பவம்!

காதலனுடன் இணைந்து கொண்டு தன்னை வளர்த்த தாயை இளம்பெண் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவமானது பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெரம்பலூரில் கீழக்குடிகாட்டு என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பச்சையம்மாள் என்பவர் வசித்து வந்தார். இவருடைய கணவரின் பெயர் பெருமாள். இருவருக்கும் பழனிவேல் என்ற மகன் பிறந்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 15 வருடங்களுக்கு முன்னர் பழனிவேல் உயிரிழந்தார். ஆதலால் இவர்கள் கவிதா என்ற ஒரு வயது பெண்ணை தத்து எடுத்து வளர்த்து வந்தனர். 

தற்போது கவிதாவின் வயது 15. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் துரதிஷ்டவசமாக பெருமாள் உயிரிழந்துள்ளார். கவிதா அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இந்த நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒன்றாக காதலித்து வந்த நிலையில், 6 மாதங்களுக்கு முன்னர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். 

திருமணம் முடிந்ததால் கவிதா தன்னுடைய பள்ளிப்படிப்பை பச்சையம்மாளிடம் தெரிவிக்காமல் முடித்து கொண்டுள்ளார். சில நாட்கள் கழித்து பச்சையம்மாளுக்கு இந்த விவகாரங்கள் தெரியவந்துள்ளது. உடனடியாக அவர் கவிதாவை கண்டித்துள்ளார். அப்போது கவிதா தன்னுடைய காதலை பிரிந்து வாழ்வதாக பச்சையம்மாளிடம் நாடகமாடியுள்ளார்.

சம்பவத்தன்று கவிதாவின் காதலர் குடிபோதையில், கவிதாவை காண்பதற்காக பச்சையம்மாள் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் பச்சையம்மாள் அவரை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த காதலன் பச்சையம்மாளை அடித்து உதைத்து கீழே தள்ளியுள்ளார்.

பின்னர் காதலியின் உதவியுடன் அவர் வெளியிலிருந்த கடப்பாறையை கல்லை எடுத்து பச்சையம்மாள் என் தலையில் வேகமாக போட்டு கொலை செய்துள்ளனர். தற்கொலை போன்று அமைய வேண்டும் என்பதற்காக இறந்த உடல் மீது மண்ணெண்ணையை ஊற்றி திறந்த சமையல் எரிவாயுவை பற்ற வைத்து அங்கிருந்து தப்பித்துள்ளனர்.

மறுநாள் காலையில், தன்னுடைய தாயார் சமையல் எரிவாயு விபத்தில் உயிரிழந்து விட்டதாக கவிதா கதை கட்டியுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அக்கம்பக்கத்தினர் பச்சையம்மாள் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணை நடத்துவதற்காக கவிதாவை தேடி அடைந்துள்ளனர். கவிதா தன்னுடைய காதலனுடன் சொகுசு லாட்ஜ் ஒன்றில் தனிமையில் இருந்துள்ளார். இதை தெரிந்து கொண்ட காவல்துறையினர் அங்கு சென்று இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் இருவருமே தாங்கள் கொலை செய்ததை ஒப்பு கொண்டுள்ளனர்.

அவர்களை சிறையில் அடைத்துள்ள காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.