உறவு முறை தெரியாமல் நடந்து கொண்டான்..! அதான்..! மகனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய அஞ்சலி..! அதிர வைக்கும் காரணம்!

கள்ளக்காதலனுடன் இணைந்து வளர்ப்பு மகனை கொலை செய்த சம்பவமானது திருநின்றவூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை புறநகரான ஆவடி அருகே கன்னிகாபுரம் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட ரேஷன் கடையில் அஞ்சலி என்பவர் வேலை பார்த்து வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய கணவரை இழந்தவர். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். ஆண் குழந்தை இல்லாத வருத்தத்தினால் சதீஷ் என்ற இளைஞரை வளர்ப்பு மகனாக வளர்த்து வந்தார்.

சில ஆண்டுகளாக அஞ்சலிக்கு காமராஜ் என்பவருடன் தகாத உறவு இருந்து வந்துள்ளது. மேலும் இதனை அறிந்துகொண்ட சதீஷ் அஞ்சலியை கடுமையாக மிரட்டி வந்துள்ளார். மேலும் 3 மகள்களையும் சதீஷ் சித்திரவதை செய்து வந்துள்ளார்.

மேலும் காமராஜுக்கும், சதீஷுக்கும் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. காமராஜரை வீட்டிற்கு வரவே கூடாது என்று சதீஷ் மிரட்டி வந்துள்ளார். தங்களது களாளக்காதலுக்கு இடையூராக இருக்கும் சதீஷ் கொலை செய்வதற்கு அஞ்சலி மற்றும் காமராஜ் முடிவெடுத்தனர்.

இருவரும் இணைந்து கூலிப்படையிடம் 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பேரம் பேசி சதீஷ் கொலைசெய்ய யுக்திகளை மேற்கொண்டனர். அதன்படி சூலூர்பேட்டை சேர்ந்த விக்னேஷ், ஆவடி வீட்டு வசதி வாரியத்தை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் சதீஷை கொலை செய்வதற்கு அழைக்கப்பட்டனர்.

திட்டமிட்டவாறு சதீஷை மது அருந்த, விக்னேஷ் மற்றும் சுரேஷ் முத்துக்குமார் என்பவரது உதவியுடன் அழைத்து சென்றனர். அங்கு வைத்து சத்ய சை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். மேலும் சதீஷின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு ஏரிக்கரையில் ரத்தக்கறைகளை சுத்தம் செய்துள்ளனர்.

சுத்தம் செய்த பிறகு இரு சக்கர வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு சென்றுள்ளனர். 2 நாட்களுக்கு முன்னர் திருநின்றவூரிலுள்ள வத்சலாபுரத்தில் கேட்பாரற்ற நிலையில் அனாதையாக ஒரு பிணம் கிடந்துள்ளது.

காவல்துறையினருக்கு தகவல் தெரிந்தவுடன் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அஞ்சலி, காமராஜ், சுரேஷ், விக்னேஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள குற்றவாளியான முத்துக்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவமானது திருநின்றவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.