கணவன் காட்டிய அன்பு! திருந்திய இளம் மனைவி! ஆத்திரத்தில் கள்ளக்காதலன் செய்த பயங்கரம்!

வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவமானது தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடியில் மில்லர்புரம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே கல்லாமொழி என்னும் பகுதியில் அனல்மின் நிலையம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த அனல்மின் நிலையத்தில் நடேசன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் மகாராணி.

மகாராணிக்கும் அதே பகுதியை சேர்ந்த இளவரசன் என்ற இளைஞருக்கும் சில காலமாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. சமீபத்தில் கண்டறிந்த நடேசன் மகாராணியை வண்மையாக கண்டித்துள்ளார். மகாராணி தான் செய்த தவறை புரிந்துக்கொண்டு இளவரசனுடன் தன் தொடர்பை துண்டித்து கொண்டார். 

இளவரசன் மகாராணியை தொடர்பு கொள்ள பல முறை முயற்சித்துள்ளார். ஆனால் மகாராணி அதற்கு இடம் கொடுக்கவில்லை. நேற்று மதியம் மீண்டும் ஒருமுறை இளவரசன் முயற்சித்துள்ளார். அப்போதும் மகாராணி கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த இளவரசன், மகாராணியின் வீட்டிற்கு சென்று கூர்மையான ஆயுதத்தால் கழுத்தை நெறித்து அவரை கொலை செய்துள்ளார். பின்னர் அந்த இடத்தில் இருந்து தப்பி சென்றுவிட்டார்.

வீடு திரும்பிய நடேசன் தன் மனைவியை கழுத்தறுந்த நிலையில் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இளவரசன் மீது சந்தேகம் எழுந்துள்ளது. தனிக்குழு அமைத்து இளவரசனை தேடி வந்தனர்.

வழக்கில் திருப்பம் ஏற்படும் வகையில் இளவரசன் தென்காசி நீதிமன்றத்தில் சரண்னடைந்தார். மகாராணியின் மேலிருந்த ஆத்திரத்தால் அவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இந்த சம்பவமானது தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.