காதலன் மீது மோகம்! கணவன், குழந்தை என் 6 பேருக்கு ஆட்டுக்கால் சூப்பில் விஷம்! மிரள வைத்த பெண்மணி!

முன்னாள் காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக கணவர் உட்பட 6 பேரை பெண்ணொருவர் விஷம் வைத்து கொலை செய்த சம்பவமானது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு கூடத்தை என்ற ஊர் அமைந்துள்ளது. இங்கு அன்னம்மா என்பவரும் அவருடைய கணவருமான டாம் தாமஸ் என்பவரும் வசித்து வந்தனர். இத்தம்பதியினருக்கு ராய் தாமஸ் என்ற மகன் இருந்தார். ராய் தாமஸின் மனைவியின் பெயர் ஜாலி. 2002-ஆம் ஆண்டில் அன்னம்மா உயிரிழந்தார். 6 ஆண்டுகள் கழித்து டாம் தாமஸ் மிகவும் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அதன்பின் சீரான இடைவேளையில் ராய் தாமஸ், அன்னம்மாவின் சகோதரரான மாத்தீவ், சிலி என்ற இளம்பெண் மற்றும் அவரது 1 வயது மகனும் இறந்தனர். சீரான இடைவெளியில் கொலைகள் நடந்ததால் காவல்துறையினரால் எளிதில் கண்டுபிடிக்க இயலவில்லை.

கொலைகளுக்கு பின்னர் ராய் தாமஸின் மனைவியான ஜாலியும், இறந்துபோன சிலி என்பவரின் கணவரான சாஜுவும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் குடும்பத்தின் சொத்து முழுவதையும் ஜாலி தன்னுடைய பெயரில் மாற்றிக்கொண்டார்.

இது காவல்துறையினருக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. காவல்துறையினர் தொடர்ந்து துப்பறிந்ததில் அந்த குடும்பத்தில் நிகழ்த்தப்பட்ட 6 கொலைகளுக்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

அதன் பின்னர் ஜாலியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 6 கொலைகளையும் தானே செய்ததாக காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். சாஜுவை திருமணம் செய்வதற்காகவும், குடும்ப சொத்துக்களை அடைவதற்காகவும் 6 பேரின் உணவிலும் சைனைடு வைத்து கொலை செய்ததாக ஜாலி வாக்குமூலம் அளித்துள்ளார்.

காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜாலியின் மகனான ரோமோ ராய் கூறுகையில், "குற்றம் செய்த அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.