சீக்கிரம் பணக்காரியாகனும்! கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஜெயந்தி செய்த விபரீதம்!

விரைவில் பணக்காரர் ஆக வேண்டிய ஆசையில் தொழிலதிபர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவமானது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ள நிலையில் மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.


சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே உள்ள தாண்டவராயன் புறத்தில் வசித்து வருபவர் சுரேஷ்குமார். இவர் ஒரு தொழிலதிபர். இவருக்கு சொந்தமாக பெட்ரோல் பங்குகள், கல்குவாரிகள் உள்ளன. இவர் தனியார் பள்ளி ஒன்றில் பங்குதாரராகவும் விளங்கி வருகிறார்.

கடந்த மாதம் 18ஆம் தேதியன்று தன் மகனை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்துவர சுரேஷ்குமார். அப்போது அவரது காரை ஸ்கார்பியோ கார் மடக்கியது. காரிலிருந்து சுரேஷ்குமாரை தாக்கி கடத்தி சென்றனர்.

ஒரு நாள் முழுவதும் சுரேஷ்குமாரை தங்களுடன் வைத்து கொண்டு, மறுநாள் அள்ளிக்குட்டை என்னும் பகுதியில் அவரை விட்டு சென்றுள்ளனர். அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகைகளை பறித்துள்ளனர். சுரேஷ்குமார் இந்த சம்பவத்தை பற்றி அப்பகுதி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். மூன்று முறை பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் போட்டது போன்ற முக்கிய துருப்புகளை காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

காவல்துறையினர் சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தனர். சுரேஷ்குமார் கூறியவாறே குறிப்பிட்ட ஸ்கார்பியோ கார் ஒன்று 3 பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோலை நிரப்பியுள்ளது. மேலும் காரின் நம்பர் பிளேட்டை வைத்து குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய் பேட்டை என்னும் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் அவரது தங்கையான ஜெயந்தி, சுரேஷ்குமாரின் உறவினரான ஹரிபிரசாத், தீபக் ராஜ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்த கடத்தல் நிகழ்விற்கு ஜெயந்தி, மற்றும் ஹரிபிரசாத் முக்கிய காரணிகளாக இருந்துள்ளனர். ஜெயந்தி பத்திரம் எழுதும் தொழிலில் உள்ளார். ஆதலால் அவருக்கு நிறைய தொழிலதிபர்கள் அரசியல்வாதிகள் ஆகிய முக்கிய புள்ளிகளுடன் தொடர்புள்ளது.

விரைவில் பணக்காரியாக வேண்டும் என்ற தன் ஆசையை ஜெயந்தி ஹரிபிரசாத்திடம் கூறியுள்ளார். சுரேஷ்குமாரை கடத்தினால் அதிகளவில் பணம் சம்பாதிக்கலாம் என்று  ஹரிபிரசாத் அறிவுறுத்தியுள்ளார்.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் இவர்களுக்கு உதவிய மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.