போலீசால் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த இளம் பெண்..! சிகிச்சை முடிந்த வீடு திரும்பிய போது எடுத்த அதிர வைக்கும் முடிவு! சென்னை திகுதிகு!

காவல்துறையினரால் விபத்தில் சிக்கிய பெண் வீடு திரும்பியவுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் யுவனேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் பிரியதர்ஷினி. பிரியதர்ஷினியின் வயது 25. தம்பதியினர் சென்ற மாதம் 20-ஆம் தேதியன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் திடீரென்று இருசக்கர வாகனத்தை மடக்கியுள்ளனர். நிலைதடுமாறிய யுவனேஷ்குமார் மற்றும் பிரியதர்ஷினி இருசக்கர வாகனத்துடன் சேர்ந்து கீழே விழுந்தனர். இதனிடையே இவர்களுக்கு பின்புறத்தில் வந்து கொண்டிருந்த லாரி மோதியதில் பிரியதர்ஷினி பலத்த காயம் ஏற்பட்டது. 

சம்பவத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையின் அராஜகமான செயலுக்கு எதிராக முழக்கமிட்டனர். மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனங்களை சரமாரியாக அடித்து நொறுக்கினர். இந்த சம்பவத்தில் 10 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பலத்த காயமடைந்த பிரியதர்ஷனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்தவுடன் வீட்டிற்கு நலமாக திரும்பிய பிரியதர்ஷினி, யாரும் எதிர்பாராதவகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பிரியதர்ஷினியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து அவருடைய தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.