மாமனாரை உயிரோடு எரித்துக் கொலை செய்த மருமகள்! பதற வைக்கும் காரணம்!

தன் மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்ய நினைத்த முதியவரை, அவரின் மருமகள் தீ வைத்து எரித்திருப்பது திருத்தணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருத்தணி. இதனருகே உள்ள நெமிலி என்ற கிராமத்தில் சபாபதி என்பவர் வாழ்ந்து வந்தார். இவரின் வயது 60. இவருக்கு பிரபாகரன் என்னும் மகன் உள்ளார். சபாபதி அவரின் மகனுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாதவரத்தை சேர்ந்த காயத்ரி என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.

1 ஆண்டிற்கு பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்தனர்.10 ஆண்டுகளுக்கு பிறகு தன் மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க சபாபதி எண்ணினார். உடனே அவர் திண்டிவனம் பகுதியில் உள்ள பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தார். 

இதனையறிந்த முதல் மனைவி காயத்ரி, சபாபதியிடம் முறையிட சென்றுள்ளார். ஆனால் சபாபதி இதற்கு சரியாக பதில் கூறவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முதல் மனைவி காயத்ரி சபாபதியை பழிவாங்க காத்திருந்தார் .இன்று காலை அவர் வீட்டுக்கு சென்ற போது சபாபதி வீட்டிற்கு வெளியே கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தார்.

உடனே அங்கிருந்த மண்ணெண்ணையை எடுத்து தனது மாமனார் மீது ஊற்றிய மருமகள் தீ வைத்துவிட்டு தனது தாயுடன் தப்பியுள்ளார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயை அனைத்த போதிலும், 70% தீக்காயங்கள் அவருடைய உடம்பில் பரவியிருந்தது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலையில் உயிரிழந்தார்.

மரண வாக்குமூலத்தில் சபாபதி தன்னை தீயிட்டு கொளுத்தியது தன் மகனின் முதல் மனைவியும்,அவளின் தாயாருமே என்று கூறியுள்ளார்.சம்பவம் தொடர்பாக திருத்தணி காவல்துறையினர் காயத்ரி அவளது தாயாரான கலைவாணி இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தனக்குத் தெரியாமல் தனது கணவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றதால் மாமனாரை மருமகள் தீயிட்டு கொளுத்திய சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.