கணவன்..! காதலன்..! பிறகு கள்ளக் காதலன்..! நள்ளிரவு தனிமையில் கருப்பசாமியில் கவிதாவுக்கு ஏற்பட்ட விபரீதம்!

கள்ளக்காதலில் ஏற்பட்ட தகராறினால் பெண் ஒருவர் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவமானது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு கவிதா என்ற 30 வயது பெண் வசித்து வந்தார். இவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர்  திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இதனிடையே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் 4 ஆண்டுகளுக்கு முன்னர் கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து வந்து தூத்துக்குடியில் தனியாக இடம்பெயர்ந்தார்.

அப்போது இவருக்கு எட்வின் என்ற நபருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே நேற்றிரவு எட்வின் வீடு திரும்பியுள்ளார்.

ஆனால் அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக உள்ளே எட்டி பார்த்தபோது எரிந்த நிலையில் கவிதாவின் சடலம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

உடனடியாக இது குறித்து அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். காவல்துறையினர் விரைந்து வந்து கவிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அப்பகுதியில் லாரி ஓட்டுநராக இருந்த கருப்பசாமி என்பவருக்கும், கவிதாவுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாகவும்.

நேற்றிரவு இருவரும் வீட்டில் ஒன்றாக இருந்தபோது, இருவருக்குள்ளேயும்  அப்போது தகராறு ஏற்பட்டதாகவும், ஆத்திரத்தில் கவிதாவை கருப்பசாமி உயிருடன் எரித்து கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த சம்பவமானது தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.