அவன் தான் என் புருசன்..! வீட்டிற்கு வந்த கள்ளக் காதலனை காப்பாற்ற பெண்மணி செய்த செயல்! கண்டுபிடித்து வெளுத்த ஊர்மக்கள்!

இளம்பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததாக இளைஞர் ஒருவரை பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவமானது ஏர்வாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஏர்வாடியில் எல்.என்.எஸ் புரம் என்ற இடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் மணி. அதே பகுதியை சேர்ந்த ரோஷன்பானு என்ற பெண்ணுடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். ரோஷன் பானுவிற்கு ஏற்கனவே திருமணமானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இருவரும் ரகசியமாக பல இடங்களுக்கு சுற்றித்திரிந்துள்ளனர். நேற்று முன்தினம் மணி ரோஷன் பானுவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதி இளைஞர்கள் மணியை வீட்டிற்க்குள் சென்று தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் மணி படுகாயமடைந்தார். மேலும் இளைஞர்கள் அந்தப்பெண்ணை கையும் களவுமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மணியை தன்னுடைய கணவர் என்று ரோஷன் பானு கூறியுள்ளார். மேலும் மணியை தாக்கிய 11 பேர் மீதும் காவல்நிலையத்தில் பானு புகார் அளித்துள்ளார். பானுவின் புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தாக்குதலில் சம்பந்தப்பட்ட ஒருவரை கைது செய்துள்ளனர். 

காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், ரோஷன் பானுவின் கணவர் வெளிநாட்டில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் 11 பேர் மீது பதிவாகியுள்ள வழக்கை நிறுத்தி வைக்குமாறு காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளனர். 

இந்த சம்பவமானது ஏர்வாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.