62 வயது முதியவருடன் வீட்டில் தனிமையில் இருந்த 35 வயது மனைவி..! கதவை தட்டிய 38 வயது கணவன்..! வயதுக்கு மீறிய தகாத உறவால் பிறகு நேர்ந்த பகீர்!

62 வயது முதியவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கணவர் கொலை செய்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் முருகன். இவருடைய வயது 38. இவர் அதே பகுதியில் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் லட்சுமி. லக்ஷ்மியின் வயது 35. இத்தம்பதியினருக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார்‌. இதனுடைய லட்சுமிக்கு அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி (62) என்ற முதியவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

கோவிந்தசாமி காவலாளியாக பணியாற்றி வந்தார். கோவிந்தசாமியின் மனைவி ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், அவருடைய மகளுக்கு திருமணம் முடிவடைந்ததாகவும் கூறப்படுகிறது. இவ்விருவரின் நெருக்கம் குறித்து தகவலறிந்த செந்தில்முருகன் மனைவியை பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும் லட்சுமி கோவிந்தசாமியிடம் தொடர்ந்து நெருங்கி பழகி வந்துள்ளார்.

இதனால் கணவன்-மனைவி இடையே கடுமையான தகராறுகள் ஏற்பட்டு வந்த வண்ணமிருந்தன. சுமார் 20 நாட்களுக்கு முன்னர் செந்தில்முருகன் லட்சுமி இடையே கடுமையான தகராறு ஏற்பட்டது. தகராறில் ஆத்திரமடைந்த லட்சுமி கோவிந்தசாமி வீட்டிற்கு சென்றுள்ளார்.

பலமுறை செந்தில்முருகன் லட்சுமியை மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துள்ளார். ஆனால் லட்சுமி செந்தில்முருகனை மதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த செந்தில்முருகன் நேற்று முன்தினம் இரவு கோவிந்தசாமியின் வீட்டிற்கு கையில் பெட்ரோல் பாட்டிலை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். இருவரையும் பார்த்தவுடன் ஆத்திரத்தில் கையில் இருந்த பெட்ரோலை இருவர் மீதும் ஊற்றி எரித்துள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். பின்னர் தீயை அணைத்துவிட்டு இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உடலில் தீ காயங்கள் வேகமாக பரவியதால் லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவிந்தசாமி தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகிறார். 

மருத்துவமனைக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கோவிந்தசாமியிடம் மரண வாக்குமூலத்தை பெற்று கொண்டனர். அதன்பிறகு செந்தில் முருகனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது எம்ஜிஆர் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.