விரைவில் திருமணம்...! அந்த இடத்தில் வலி! துடியாய் துடித்த மணப்பெண்! ஸ்கேன் ரிப்போர்ட்டில் தெரிய வந்த பகீர் உண்மை!

இளம்பெண்ணின் மூக்கிற்குள் பட்டன் இருந்த சம்பவமானது திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரம். இங்கு 22 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு அடுத்த வாரம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பெண் கடந்த 10 வருடங்களாக தன்னுடைய மூக்கில் வலி இருப்பதாக பெற்றோரிடம் கூறி வந்துள்ளார்.

பெற்றோரும் தங்கள் மகளை பல்வேறு இடங்களுக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். ஆனால் எங்குமே இந்த பிரச்சனை முழுமையாக தீரவில்லை. இதழ்களின் கடந்த சில வருடங்களாகவே சிரமங்களை சந்தித்து வந்திருந்தார். திருமணத்திற்கு முன்பு இந்த பிரச்சனையை தீர்த்து விட வேண்டும் என்று அவருடைய பெற்றோர் முடிவெடுத்தனர். அதன்படி பட்டாம்மில் உள்ள "சட்-பிஆர்" மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்து பார்த்தனர். அந்த ஸ்கேனிங் ஒரு திடுக்கிடும் உண்மை வெளியானது.

அதாவது அந்த பெண்ணின் மூக்கிற்குள் சட்டை பட்டன் இருந்துள்ளது. மேலும் மூக்கின் சதையும் வளர்ந்து இருந்ததால் அதன் வழியே செல்லும் காற்றை பட்டன் மறைத்துவிட்டது. இதனால் மூச்சு விடுவதற்காக அந்த பெண் மிகவும் சிரமப்பட்டுள்ளார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். உடனடியாக அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக மூக்கிலிருந்து சட்டை பட்டனை வெளியே எடுத்தனர். கடந்த பத்து வருடங்களாக அந்த இளம்பெண் சந்தித்து வந்த சிரமங்களுக்கு ஒரு நல்ல முடிவு கிடைத்தது.

இந்த சம்பவமானது கேரளா மாநிலத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.