ஓடும் பேருந்தில் நிகழ்ந்த திக் திக் சம்பவம்! பெண்களே தேவை உஷார்! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்ணுக்கு போதை பொருள் கலந்த குளிர்பானத்தை அளித்து பணம் மற்றும் நகை திருடப்பட்ட சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாதிக்கப்பட்ட பெண் திருகோணமலையை சேர்ந்தவர். இவர் இப்பகுதியில் சொந்த வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று காலையில் திருகோணமலையிலிருந்து இவர் குருணாகலுக்கு சென்றார். தன்னுடைய வேலைகளை எல்லாம் முடித்து விட்டு மீண்டும் திருகோணமலைக்கு பேருந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது இந்தப் பெண்ணிடம் நடுத்தர வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். பின்னர் இருவரும் பேருந்தில் நட்புறவாடி வந்தனர். அப்போது அந்த நபர் பெண்ணுக்கு குளிர்பானம் தந்துள்ளார். சற்று அறிமுகம் ஆனவர் என்பதால் அந்த பெண்ணும் குளிர்பானத்தை குடித்தார்.

ஆனால் அந்த நபர் பெண்ணின் உடைமைகளை திருடுவதற்காக குளிர்பானத்தில் போதை பொருட்களை கலந்து வைத்திருந்தார். குடித்த சில நிமிடங்களிலேயே அந்த பெண்ணுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அந்த பெண்ணிடம் இருந்த 1 லட்ச ரூபாய் பணமும், 5.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் அந்த நபர் எடுத்துக்கொண்டார்.

அந்த பெண்ணின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது பேருந்தில் பயணித்தோர் கண்டறிந்தனர். உடனே அந்த நபர் பேருந்திலிருந்து இறங்க முயல்வதை பார்த்த சுதாரித்தனர். அந்த மர்ம நபரை பேருந்துகுள்ளேயே வைத்து விசாரித்தனர். அப்போது அவரிடம் இருந்த நகை மற்றும் பணத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

அந்த நபரை தர்மஅடி அடித்து அப்பகுதியை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது திரிகோணமலையில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.