உடல் முழுவதும் காயம்! ஆடைகள் களைந்து பரிதாபம்! கணவனை பிரிந்து வாழ்ந்த பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்!

பெண்ணொருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமானது பொன்னேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வடசென்னை புறநகர் பகுதியில் மீஞ்சூரும் ஒன்றாகும். இங்கு மாலதி என்ற 35 வயது பெண் வசித்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் 10 மாதங்களுக்கு முன்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் பிரிந்து வாழ தொடங்கினர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் மீஞ்சுருக்கு அடுத்துள்ள நாலூர் ஏரிக்கரையின் முட்புதரில் அவர் சடலமாக கிடந்துள்ளார். அவருடைய சடலத்தைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அப்பகுதி காவல் நிலையத்தில் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மாலதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் பல இடங்களில் காயம் இருந்துள்ளது. மேலும் அவரது ஆடைகளும் களைந்து கிடந்தன.

இதனிடையில் மாலதியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக காவல்துறையினர் வியூகிக்கின்றனர். மேலும் மாலதியை மர்ம நபர்கள் கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.