கர்ப்பிணிப் பெண் ஒருவரின் எக்ஸ்-ரேயில் 3 குழந்தைகள் தெரிந்து வந்த நிலையில், 4 குழந்தைகள் பிறந்த சம்பவமானது மருத்துவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்ப்பிணி வயிற்றின் X Ray ரிப்போர்ட்டில் இருந்த 3 குழந்தைகள்..! ஆனால் பிரசவத்தின் போது டாக்டர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! என்ன தெரியுமா?

சுனிதா பிரதன் என்ற 26 வயது இளம்பெண் நேபாளத்தை சேர்ந்தவர். இவருடைய கணவரின் பெயர் கௌரவ். கௌரவ் வெளிநாட்டில் பணியாற்றி வந்தார். மனைவியின் பிரசவத்திற்காக சில வாரங்களுக்கு முன்னர் நேபாளம் திரும்பினார். சுனிதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த வீடியோ எக்ஸ்ரேயில் அவருடைய கருவில் 3 குழந்தைகள் இருப்பது தெரியவந்தன.
2 நாட்களுக்கு முன்னர் அவருக்கு சிசேரியன் முறையில் பிரசவம் மேற்கொள்ளப்பட்டது. பிரசவத்தின் இறுதியில் அவருக்கு 4 குழந்தைகள் பிறந்தன. இது அங்கிருந்த மருத்துவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "80000 பெண்களில் ஒருவருக்கு இதுபோன்று ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறக்கும். எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது அவரின் கருவறையில் 3 குழந்தைகள் மட்டுமே இருந்தனர். ஆனால் சிசேரியன் செய்த போது 3 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இது எங்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 4 குழந்தைகளும் எடை குறைவாக இருப்பினும் ஆரோக்கியமாக உள்ளனர்" என்று கூறினர்.
இந்த சம்பவமானது அந்த மருத்துவர்களை பெரிய அளவில் ஆச்சரியப்படுத்தியது.