சிசேரியன் பிரசவம்! தையல் போட்டதால் தாங்க முடியாத வயிற்று வலி! பிறந்த குழந்தையை மறந்து கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு!

வயிற்று வலி தாங்காமல் பெண்ணொருவர் 3-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை தண்டையார்பேட்டையில் நாகமணி மருத்துவமனை இயங்கி வருகிறது. போரூர் ஆலப்பாக்கம் என்னுமிடத்தில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு சென்ற மாதம் 21-ஆம் தேதியன்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக உறவினர்கள் அவரை நாகமணி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், 25-ஆம் தேதியன்று அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்தால் அவருடைய வயிற்றில் தையல் போடப்பட்டிருந்தது. தையல் சரியாக போடப்படாத காரணத்தினால் வலியால் துடித்து வந்துள்ளார். வலியை தற்காலிகமாக நீக்குவதற்காக மருத்துவர்கள் மருந்து அளித்து வந்துள்ளனர். ஆனால் வலி குறைந்தபாடில்லை. வலியை தாங்கி கொள்ள இயலாததால் 2-ஆம் தேதி நள்ளிரவு 1:30 மணியளவில் மருத்துவமனையின் 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். பதறிப்போன அவருடைய உறவினர்கள் விஜயலட்சுமி இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதனர்.

சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவமானது நாகமணி மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.