காரில் சென்ற பெண்ணுக்கு ஹெல்மெட் போடவில்லை என அபராதம்! சென்னை போலீசின் அட்ராசிட்டி!

கார் ஓட்டியவருக்கு தலைக்கவசம் அணியவில்லை என்று போக்குவரத்து காவல்துறை குறுஞ்செய்தி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் கொட்டிவாக்கம் எனும் பகுதி அமைந்துள்ளது. இங்கு பரமேஸ்வரன் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மனைவியின் பெயர் நந்தினி. எதிர்பாராத சமயத்தில் போக்குவரத்து காவல் துறையினரிடமிருந்து அவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டியதற்காக 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மொபைலில் வந்துள்ளது.

அந்த குறுஞ்செய்தியில் வந்த பதிவெண் நந்தினி ஓட்டி வந்த கார் எண்ணாகும். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நந்தினி. யானைகவுனியில் அமைந்துள்ள போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இணை ஆணையர் ஜெயகௌரி அவர்களிடம் விசாரித்து வழக்கு பதிவு செய்தார். 

காரில் சென்ற பெண்மணிக்கு ஏன் ஹெல்மெட் போடவில்லை என்று போலீசார் அபராதம் போட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவமானது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதே சமயம் போலீசார் தற்போது மின்னணு எந்திரங்கள் மூலமாக அபராதம் வசூலிப்பதை போலீசார் சுட்டிக்காட்டுகின்றனர்.

காரில் சீட் பெல்ட் அணியாமல் நந்தினி சென்றதற்காக அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெல்மெட் அணியாத பிரிவில் அபராதம் வசூலாகியிருக்கும் என்று போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.