தலை கீழகாத்தான் விழுவேன்! 80 அடி உயரம்! 110 எலும்புகள் நொருங்கின! விபரீத யோகாவால் உயிருக்கு போராடும் பெண்!

யோகா செய்வதற்காக 80 அடி உயரத்திலிருந்து பெண்ணொருவர் கீழே தொங்கிய சம்பவமானது மெக்சிகோ நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மெக்சிகோ நாட்டில் அலெக்சா தெரசா என்ற பெண் வசித்து வந்தார். இவருடைய வயது 23. அந்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கல்லூரியில் அலெக்சா படித்து வருகிறார். இவருக்கு யோகாவில் அதீத ஈடுபாடு உள்ளது. 6-வது தளத்தில் வசித்து வரும் இவர் மிகவும் சிரமமான யோகாவை பயிற்சி பெறுவதற்காக பால்கனியின் விளம்பிலிருந்து தலைகீழாக தொங்கி கொண்டிருந்தார்.

திடீரென்று கைப்பிடி நழுவியதால் 80 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். விழுவதற்கு முன்பு அவருடைய தோழி எடுத்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 80 அடியிலிருந்து கீழே  விழுந்ததால் அலெக்சாவுக்கு மொத்தம் 110 எலும்புகள் உடைந்துள்ளன.

உயிருக்குப் போராடி கொண்டிருக்கும் நிலையில் உள்ள அவருக்கு ஆயிரக்கணக்கானோர் ரத்த தானம் அளிக்க முன்வந்துள்ளனர். இந்த சம்பவமானது மெக்சிகோ நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.