பள்ளி மாணவனுடன் காதலில் விழுந்த திருமணமான பெண்! கண்டு பிடித்த ஊர் மக்கள்! பிறகு அரங்கேறிய பகீர் சம்பவம்!

மனைவி பள்ளி மாணவனுடன் கள்ளக்காதல் வைத்திருந்த சம்பவமானது பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சம்பந்தப்பட்ட பெண். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நபருடன் திருமணம் நடைபெற்றது. வாழ்க்கையின் தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருந்தனர்.

ஆனால் யாரும் எதிர்பாராவிதமாக பெண்ணின் கணவர் திருநங்கையாக மாறிவிட்டார். இது அனைவருக்கும் பேரதிர்ச்சியை அளித்தது. திருநங்கையாக மாறிய உடன் பல்வேறு கோவில் திருவிழாக்கள், ராம்லீலா நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கூத்தாடுவதை வழக்கமாக கொண்டார்.

இந்த மாற்றங்களால் அந்த பெண் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். அப்போது அவருக்கு ஆதரவு தரும் வகையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் பேசி வந்தான். உடனே தனக்கு ஆதரவு கிட்டியது என்று எண்ணிய பெண் அந்தமான் அவனுடன் நெருங்கி பழகி வந்தார். நெருக்கமானது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளனர்.

சிறிது நாட்கள் கழித்து இதனை அறிந்த பொதுமக்கள் கடும் கோபமடைந்தனர். அந்த மாணவனை சரமாரியாக அடித்தனர். ஒருகட்டத்தில் ஊர் ஒதுக்குப் புறத்தில் வைத்து கொன்று விடுவதாக முடிவெடுத்தனர். பின்னர் மனம் மாறி இருவருக்கும் செருப்பு மாலை அணிவித்து ஊர் முழுவதும் சுற்றிவர வைத்தனர்.  இதனை பலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். தண்டனை நிறைவு பெற்றவுடன் அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்.

இந்த சம்பவமானது பீகார் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.