தினமும் ஒரே ஒரு வீடியோ! மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கும் இளம் பெண்! எப்படி தெரியுமா?

யூடியூப் சேனல் மூலம் பெண்ணொருவர் மாதம் 1 லட்சம் சம்பாதிப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.


சமீப காலங்களில் தனிப்பட்ட நபர் தொடங்கும் யூட்யூப் சேனல்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இதனால் பல்வேறு தரப்பினர் தங்களுக்கென்று யூடியூப் சேனல் தொடங்கி சம்பாதித்து வருகின்றனர். ஆனால் பெண்கள் இதில் அதிகளவில் ஈடுபடுவது இல்லை என்று ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது. 

ஆனால் இந்த அறிக்கைக்கு நேர்மாறாக கேரள மாநிலத்தை சேர்ந்த அண்ணி யூஜின் என்ற பெண் மாதந்தோறும் 1 லட்சம் ரூபாய் சம்பாதித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "என்னுடைய வீட்டில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன்.  2015-ஆம் ஆண்டில் முதன்முதலில் என்னுடைய தோட்டத்தில் வளர்ந்த பழங்களை புகைப்படம் எடுத்து யூடியூபில் பதிவிட்டேன். என்னுடைய முதல் பதிவிற்கே 8300 லைக்குகள் கிடைத்தன. சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவு செய்யும்போது அதற்கு ஏற்றவாறு விளம்பரங்கள் அளிக்கப்படும். அதுபோன்று என்னுடைய வீடியோக்களுக்கு விளம்பரங்கள் வருகின்றன.

அதன்மூலம் மாதம் எனக்கு 1 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. பழங்கள் மற்றும் காய்கறிகளின் புகைப்படங்கள் மட்டுமின்றி இயற்கை விவசாயம் செய்வதற்கு உரிய ஆலோசனைகளையும், பூச்சிகளை அழிப்பதற்கான டிப்ஸ்களையும் அளித்து வருகிறேன். இதனால் விவசாயிகள் என்னுடைய யூடியூப் சேனலை மிகவும் விரும்பிப்பார்த்து வருகின்றனர். எ

எனக்கு இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதரர்கள் உள்ளனர். 2 கோடிக்கும் அதிகமாக என்னுடைய யூடியூப் பக்கத்தினை பார்த்துள்ளனர். இயற்கை விவசாயத்தின் மூலம் சம்பாதிப்பது காட்டிலும் யூடியூப் சேனல்கள் மூலம் நிரந்தர சம்பளம் கிடைக்கிறது" என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

இந்த செய்தியானது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.