அரசு மருத்துவமனை பெண் டாக்டருக்கே இந்த கதியா? அதிர வைத்த சம்பவம்!

டெங்கு காய்ச்சலால் அரசு பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவமானது மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் வளையநத்தம் சாலையில் விசாலாட்சிபுரம் என்னும் இடம் அமைந்துள்ளது. இங்கு பிருந்தா என்பவர் வசித்து வந்தார். இவர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள அரசனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் அதே மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

கடந்த சில நாட்களாக பிருந்தாவுக்கு காய்ச்சல் இருந்து வந்துள்ளது. சிகிச்சை எடுத்துக் கொண்டும் காய்ச்சல் தீரவில்லை. அதனால் நேற்று காலை அவர் மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் உடனடியாக பரிசோதித்து பார்த்ததில் அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக மருத்துவர்கள் தீவிர சிகிச்சை தர தொடங்கினர். 

இருப்பினும் நேற்று மாலையில் சிகிச்சை பலனின்றி பிருந்தா உயிரிழந்தார். இந்த சம்பவமானது அரசனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.