இதுநாள் வரை நான் வாழ்ந்த வாழ்க்கை அழுக்கானது! நெருங்கிய திருமணம்! கடிதம் எழுதிவிட்டு மணப்பெண் செய்த செயல்! பகீர் காரணம்!

2 வாரங்களில் திருமணம் நடக்க இருந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது மத்தியப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மத்தியப்பிரதேச மாநிலத்தில் இந்தோர் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு பவன் என்பவர் வசித்து வந்தார். இவர் ப்ரீத்தி என்ற 27 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார். தங்களுடைய காதலை இருவரும் இரு வீட்டாருக்கும் தெரிவித்தனர். இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த பிறகு சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இருவருக்கும் இன்னும் 2 வாரங்களில் திருமணம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. நேற்று திடீரென்று பிரீத்தி மிகுந்த மன உளைச்சலால் அவதிப்பட்டு வந்தார். தன்னுடைய அறைக்கு சென்று உள்தாழிட்டு கொண்டார். நீண்ட நேரம் ப்ரீத்தி வெளியே வராததால் அவருடைய சகோதரியான பயல் சந்தேகம் அடைந்தார். பின்னர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது ப்ரீத்தி சடலமாக தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக உறவினர்கள் அப்பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரீத்தியின் சடலத்தை தங்கியிருந்து கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில், " நான் தற்கொலை செய்து கொண்டதற்கு யாரும் காரணமில்லை. என் வாழ்க்கை மிகவும் அழுக்கானது. இந்த முடிவை நானே எடுத்தேன்" என்று எழுதி வைத்திருந்தார். பின்னர் பவனிடம் விசாரணை நடத்தியதில் சில திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.

பிரீத்தி மற்றும் பவன் மேட்ரிமோனி நிலையத்தின் மூலம் அறிமுகம் பெற்றார்கள். அதன் பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கினர். காதலி வீட்டில் தெரிவித்த பிறகு இருவர் வீட்டாரும் திருமணத்திற்கு முடிவெடுத்தனர். முடிவுக்கு பின்னர் ஜாதக பொருத்தம் பார்த்த போது, ப்ரீத்தியின் ஜாதகத்தில் ஏதோ தோஷம் இருப்பதாக கூறப்பட்டது. பரிகாரம் செய்துவிட்டால் தோஷம் நீங்கிவிடும் என்று இருவீட்டாரும் ப்ரீத்தியிடம் கூறினார். ஆனால் அதைக்கேட்டு ஆத்திரமடைந்து அனுமதி வழங்க பிரீத்தி மறுத்துவிட்டார். இதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.