ரூ.25 லட்சம் பேங்க் பேலன்ஸ்..! யாரிடமும் சொல்லாமல் இறந்து போன பெண்மணி! பணத்திற்கு என்ன நேர்ந்தது தெரியுமா?

உயிரிழந்த பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை எடுத்து அதிகாரிகள் களவு செய்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் எமிலிசோலா. மாவட்டத்திலுள்ள ஐஓபி வங்கி கிளையில் 30 லட்ச ரூபாய் வைப்புத் தொகை வைத்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் திடீரென்று இறந்து போனார். இறந்த பின்னர் வங்கி கணக்கு தொடர்பாக அவருடைய உறவினர்கள் யாரும் வரவில்லை.

உடனடியாக வங்கியின் மேலாளரான ஷேக் மொய்தீன் மற்றும் உதவியாளரான சின்னதுரை, பணத்தை கையாடல் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி முதலில் இறந்த பெண்மணியின் வங்கி கணக்கில் புதுப்பித்துள்ளனர். மேலும் போலி கையெழுத்துகளின் மூலமாக ஏடிஎம் கார்டு வாங்கியுள்ளனர். அதன் பிறகு கடந்த சில மாதங்களாக மொத்தம் 25 லட்சம் ரூபாயை கையாடியுள்ளனர்.

வங்கி தணிக்கை குழுவிற்கு பெருத்த சந்தேகம் ஏற்பட்டது. இறந்த பெண் வங்கிக்கு வராமல்,  மேலும் ஏடிஎம் கார்டுகளின் மூலமாக மட்டும் பணத்தை எடுத்தது அவர்களுடைய  சந்தேகத்தை மேலும் அதிகரித்தது. உடனடியாக விசாரணை நடத்தியதில் மேலாளரும், உதவி மேலாளரும் சிக்கிக்கொண்டனர்.

உடனடியாக இருவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். கையாடல் செய்த பணத்தை மீட்பதற்காக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இருவர் மீதும் காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்த சம்பவமானது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.