கொட்டித் தீர்த்த மழை! மின் கம்பத்தை தொட்ட இளம் பெண்! பிறகு நேர்ந்த பயங்கரம்!

மழை பொழிந்து கொண்டிருந்த போது மின்சார கம்பியின் மீது கை வைத்த இளம்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சூரத் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குஜராத் மாநிலத்தில் சூரத் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள பிரபு தர்ஷன் சொசைட்டி என்னும் பகுதியை சேர்ந்தவர் காஜல். இவருக்கு வயது 20. வெள்ளிக்கிழமையன்று அந்த பகுதியில் பேய் மழை பெய்து கொண்டிருந்தது.

கவன சிதறலில் வீட்டு பால்கனிக்கு அருகே இருந்த மின் கம்பியை காஜல் தொட்டுவிட்டார். மின் கம்பியை தொட்டவுடன் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. மின்கம்பத்தில் சாய்ந்தவாறு காஜல் கீழே விழுந்துவிட்டார். அருகில் இருந்த பொதுமக்கள் காஜலை தொட்டால் தங்களுக்கும் மின்சாரம் ஏறி விடும் என்று பயந்து உதவிக்கு வராமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

காஜலுக்கு ஏற்பட்ட விபத்தை பற்றி அங்கிருந்தோர் அவருடைய பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். காஜலின் தந்தை விரைந்து வந்து காஜலை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் காஜல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் இந்த சம்பவமானது பதிவானது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.