ஹாஸ்பிடலுக்குள் புகுந்து நர்சுக்கு தர்ம அடி! பெண் நோயாளியின் உறவினர்கள் ஆத்திரம்! அதிர வைக்கும் காரணம்!

சிகிச்சை அளிக்க தாமதமானால் எதிர்பாராத விதமாக உயிரிழந்த பெண்ணின் உறவினர் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியரை தாக்கியுள்ள சம்பவமானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம்  என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே உள்ள கொட்டையூர் எனும் கிராமத்தை சேர்ந்தவர் ருக்மணி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நேற்று இரவு இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கினர். லாரியில் மோதிய ருக்மணி தூக்கி வீசப்பட்டார். பலத்த காயங்களுடன் கோயம்புத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு ருக்மணியை அனுமதித்தனர்.

இதனால் மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் குறிப்பிட்ட நேரத்தில் அவருக்கு சிகிச்சையை தொடங்கவில்லை. ஆகையால் ருக்மணி இறந்து போனார். சம்பவத்தை அறிந்த ருக்மணியின் உறவினர்கள், சிகிச்சை அளிப்பதற்கு தாமதமானதால்  ருக்மணி இறந்துபோனார் என்று குற்றஞ்சாட்டினர். காரணமான செவிலியரை உறவினர்கள் தாக்கியுள்ளனர்.

மேலும் அங்கிருந்த மறைந்து பாட்டில்களையும், பொருட்களையும் தூக்கி எறிந்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் செவிலியருக்கு சிறிது காயம் ஏற்பட்டது. மருத்துவமனையின் கண்ணாடிகள் சுக்கு நூறாக உடைந்தன. 

ருக்மணியின் உறவினர்கள் மருத்துவமனையின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மற்றொருபுறம் செவிலியரை தாக்கியவருக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று கூறி செவிலியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புறநோயாளிகளை கவனிக்க இயலாது என்று கூறி செவிலியர்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் அறிந்த மேட்டுப்பாளையம் காவல்துறையினர் விரைந்து வந்தனர். அப்போது அவர்களிடம் மருத்துவமனையின் பொறுப்பாளர் புகார் அளித்தார். சம்பந்தப்பட்ட நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது மேட்டுப்பாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.