நடு வீட்டில் தூக்கில் தொங்கிய பெண் தாசில்தாரின் மகள்! காரணம் தெரியாமல் கதறும் பெற்றோர்!

பெண் தாசில்தாரின் மகள் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவமானது தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் எழுதும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகே ராஜேந்திரா நகர் என்னுமிடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் அன்பரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் அரசு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் பங்கஜம். இவர் தாராபுரம் பகுதியின் துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார். பதவி உயர்வுக்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இத்தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில்  பணியாற்றி வருகிறார். இளைய மகளின் பெயர் லட்மிஹா. இவர் உடுமலை ரோட்டிலுள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அன்பரசு சென்னையிலும் அவருடைய மூத்த மகள் மதுரையில் வசித்து வருகின்றனர். 

பங்கஜம் லட்மிஹாவுடன் உடுமலை ரோட்டில் வசித்து வருகிறார். நேற்று மாலை வேலையில் கோவிலுக்கு வருமாறு பங்கஜம் அவருடைய மகளை அழைத்து உள்ளார். ஆனால் லட்மிஹா தனக்கு வீட்டுப்பாடம் இருப்பதாக கூறி செல்ல மறுத்துள்ளார். 

பங்கஜம் கோவிலுக்கு சென்று இரவு 8 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவருக்கு பேரதிர்ச்சி காத்து கொண்டிருந்தது. லட்மிஹா தன் அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அலறி அடித்து பங்கஜம் அக்கம் பக்கத்தினரை அழைத்தார். லட்மிஹாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

சம்பவத்தை குறித்து தாராபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தாராபுரம் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அவருடைய உடலை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவமானது தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.