நிமிடத்திற்கு 1 குழந்தை! 4 நிமிடங்களில் 4 குழந்தைகள்! மருத்துவர்களை மலைக்க வைத்த இளம் பெண் பிரசவம்!

4 நிமிடங்களில் 4 குழந்தைகளை இளம்பெண் ஒருவர் பெற்றெடுத்திருப்பது பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் சியாரா ஃப்ளின். இவருடைய கணவரின் பெயர் ஷேன் மாகி. இவருக்கு இளம் வயதிலேயே "பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்" என்ற ஹார்மோன் குறைபாடு இருந்துள்ளது. இதனை மருத்துவர்கள் இளம் வயதிலேயே கண்டறிந்தனர். ஆகையால் ஊசிகளை கொண்டு ஹார்மோன்களை செயற்கையாக தூண்டினர். 

இவ்வளவு முயற்சித்தும் சியாராவால் கருவுற இயலவில்லை. இதனால் மருத்துவர்கள் ஐ.வி.எஃப்.ஐப் என்னும் முறையை கையாண்டனர். மருத்துவர்களின் முயற்சிக்கு பலனளிக்கும் வகையில் சியாரா கர்ப்பமடைந்தார். 8 மாத கர்ப்பிணியாக இருந்த போது டப்ளின் நகரில் அமைந்திருந்த கூம்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இன்று காலை சியாராவுக்கு மருத்துவர்கள் பிரசவம் பார்த்தனர். காலை 9:19 மணி முதல் 9:23 மணி வரை 3 பெண் குழந்தைகளையும், ஒரு ஆண் குழந்தையையும் சியாரா பெற்றெடுத்தார். குழந்தைகளும், தாயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஷேன் கூறுகையில், "4 குழந்தைகள் பிறந்ததால் என்னுடைய வாழ்க்கை பரபரப்பாகிவிட்டது" என்று மகிழ்ச்சியாக கூறினார்.

இந்த சம்பவமானது பிரிட்டனில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.