பிரசவ வலியோடு மருத்துவமனைக்குள் சென்ற கீர்த்திகா..! தாயும் சேயும் சடலமாக வெளியே வந்த பயங்கரம்! அதிர்ச்சி காரணம்!

குழந்தை பிறந்து சில மணி நேரத்திலேயே தாயும்,சேயும் உயிரிழந்திருப்பது ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


ராமநாதபுரத்திற்கு அருகே அமைந்துள்ள ராஜ சூரிய மடை எனும் இடத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அரியக்குடி பகுதியை சேர்ந்த கீர்த்திகா என்ற பெண்ணுடன் 1.5 வருடங்களுக்கு முன்னால் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கார்த்திகாவுக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவருடைய உறவினர்கள் அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சைக்கு பின்னர் கீர்த்தி அக்காவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இது கீர்த்திகாவின் உறவினர்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது. உடனடியாக அவர்கள் நேற்று காலை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

பிரசவத்தின் போது மருத்துவர் மற்றும் செவிலியரின் அலட்சியத்தால் தான் இந்த மரணங்கள் ஏற்பட்டதாக கூறி முற்றுகையிட்டனர். மேலும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மே மாதத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது மாவட்ட ஆட்சியர் மருத்துவர்களை கண்டித்து "பணி நேரத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது" என்று அறிவுரை செய்து புறப்பட்டார்.

ஆனால் மீண்டும் இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது. காவல்துறையினர் முற்றுகையில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.