திடீரென தையல் பிரிந்து வயிற்றில் இருந்து குடல் வெளியே வந்தது..! பாத்ரூமில் 38 வயது பெண்ணுக்கு ஏற்பட்ட பயங்கரம்! அதிர்ச்சி காரணம்!

சிசேரியன் மூலம் குழந்தையை பெற்ற தாயாரின் கையில் அவருடைய குடல் சரிந்துள்ள சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஸ்காட்லாந்து நாட்டில் மாக்டஃப் என்ற நகர் அமைந்துள்ளது. இங்கு 38 வயது பெண்மணியான மெல் ப்ரெம்னர் என்பவர் வசித்து வந்துள்ளார். 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையை பெற்றுக்கொண்டார்.  

மருத்துவமனையில் இருந்து சில நாட்கள் கழித்து வீட்டிற்கு சென்றுள்ளார். திடீரென்று ஒருநாள் வீட்டில் குளித்து கொண்டிருந்தார். அப்போது ஷாம்பு பாட்டில் ஒன்று கை தவறி கீழே விழுந்துள்ளது. கீழே விழுந்த ஷாம்பு பாட்டிலை மெல் ப்ரெம்னர் எடுக்க முயற்சித்துள்ளார். 

அப்போது வயிற்றில் போடப்பட்டிருந்த தையல் பிரிந்து குடல் சரிந்து அவருடைய கையில் விழுந்துள்ளது. அதிர்ச்சியடைந்த ப்ரெம்னர் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு கட்டிலில் சென்று படுத்துள்ளார். உடனடியாக தன்னுடைய கணவருக்கு கால் செய்து நிகழ்ந்தவற்றை கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த கணவர் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

அங்கு ப்ரெம்னருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, அவர் ஆபத்திலிருந்து தப்பித்தார். சில மாதங்கள் கழித்து அவர் தன்னுடைய குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார்.

அந்த புகைப்படத்தின் கீழ், "சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது எப்போதும் சுகப்பிரசவம் போல் அமையாது" என்று கூறிவிட்டு அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பதிவிட்டிருந்தார்.

இந்த புகைப்படமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.