கணவனை பிரிந்து தனிமையில் இருந்த சுகன்யா! நடுக்காட்டில் சடலமாக கிடந்த பரிதாபம்! குலை நடுங்க வைக்கும் கொலை!

திருப்பூர் மாவட்டத்தில் நடுக்காட்டில் பெண் ஒருவர் பிணமாக கிடந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டம் பல்லடம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே பெத்தாம்பாளையம் சாலை அமைந்துள்ளது. இங்கு காடொன்று அமைந்துள்ளது. இன்று காலையில் திடீரென்று இப்பகுதியில் பெண்ணொருவர் சடலமாக கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சடலமாக கிடந்த பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

பெண் கொலை செய்யப்பட்டு இருப்பதற்கு சம்பந்தமாக காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாரா என்பதனை ஆய்வு செய்ய அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காணாமல் போனதாக அப்பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள புகார்களில் இவர் ஒருவரா என்பதனை ஆய்வு செய்து வந்தனர். மேலும் காட்டின்  நடுப்பகுதியில் ஸ்கூட்டி ஒன்று தனிமையில் நின்று கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தனி குழுக்களை அமைத்து விசாரித்து வந்தனர். வழக்கில் திடீரென்று ஒரு திருப்புமுனை அமைந்தது. அதாவது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனுமார்ப்பாளையத்தை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர் 31-ஆம் தேதியன்று தன் மகனான சுகன்யாவை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார்.

காவல்துறையினர் கோவிந்தராஜனை அழைத்து சடலத்தை அடையாளம் காட்டும்படி கூறினர். துரதிர்ஷ்டவசமாக சுகன்யா தான் நடுக்காட்டில் பிணமாக கிடந்துள்ளார். இதன் பின்னர் காவல்துறையினர் விசாரணை நடத்த தொடங்கினர்.

சுகன்யா 9 ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த இமானுவல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த போது நெருக்கம் ஏற்பட்டுள்ளது இத்தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக மூன்று மாதங்களுக்கு முன்னர் சுகன்யா அனுமார்பாளையத்தில் உள்ள தன் பெற்றோரின் வீட்டிற்கு வந்துள்ளார். இங்கே இருந்து வந்த பனியன் நிறுவனத்திற்கு சுகன்யா சென்று வந்துள்ளார். 

இதனிடையே தற்போது சுகன்யா கொல்லப்பட்டுள்ளார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினர் முயற்சித்து வருகின்றனர். இந்த சம்பவமானது பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.