நடுக்காட்டில் ஸ்கூட்டி! அருகே இளம் பெண் சடலம்! போலீசையே அதிர வைத்த சம்பவம்! திருப்பூர் திகுதிகு!

திருப்பூர் மாவட்டத்தில் நடுக்காட்டில் பெண் ஒருவர் பிணமாக கிடந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டம் பல்லடம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே பெத்தாம்பாளையம் சாலை அமைந்துள்ளது. இங்கு காடொன்று அமைந்துள்ளது. இன்று காலையில் திடீரென்று இப்பகுதியில் பெண்ணொருவர் சடலமாக கிடந்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சடலமாக கிடந்த பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருப்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். இதனை பார்த்து போலீசாரே அதிரும் வகையில் கொடூரமாக கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.

பெண் கொலை செய்யப்பட்டு இருப்பதற்கு சம்பந்தமாக காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாரா என்பதனை ஆய்வு செய்ய அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும் காணாமல் போனதாக அப்பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள புகார்களில் இவர் ஒருவரா என்பதனை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் காட்டின்  நடுப்பகுதியில் ஸ்கூட்டி ஒன்று தனிமையில் நின்று கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தனி குழுக்களை அமைத்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.