ரெண்டு கல்யாணம்! ஏராளமான ஆண் நண்பர்கள்! அப்படியும் அடங்காத முத்துமாரி! சடலமாக மீட்கப்பட்டதன் அதிர்ச்சி பின்னணி!

அறிவுரைகளை மீறி தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்ததால்  இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவமானது திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் என்னும் இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட சின்ன உலகாணி எனும் பகுதியை சேர்ந்தவர் முத்துமாரி. இவருக்கு திருப்பரங்குன்றம் அருகே அமைந்துள்ள நாகமலை புதுக்கோட்டை என்னும் இடத்தை சேர்ந்த கண்ணன் என்பவருடன் 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருந்தது. 

இதனிடையே முத்துமாரிக்கு வேறு ஒரு இளைஞருடன் தவறான தொடர்பு இருந்ததால், கண்ணன் அவரை விவாகரத்து செய்தார். இதனால் முத்துமாரி தன்னுடைய தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இங்கேயும் முத்துமாரிக்கு நிறைய ஆண் நபர்களுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. முத்துமாரியின் குடும்பத்தினர் அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அவர்களின் கண்டிப்பை பொருட்படுத்தாமல் முத்துமாரி தொடர்ந்து வரம்பு மீறிய செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். 

ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன முத்துமாரியின் குடும்பத்தினர், அவருக்கு பெரியகருப்பன் என்ற எலக்ட்ரிஷியனை திருமணம் செய்து வைத்தனர். பெரியகருப்பன் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருவதால் அவ்வப்போது வெளியூருக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

திடீரென்று முத்துமாரி திங்கட்கிழமை மதியத்திலிருந்து காணாமல் போயுள்ளார். குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். மாலையில் அப்பகுதிக்கு அருகேயிருந்த கண்மாயில் தலை நசுங்கி முத்துமாரியின் உடல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் முத்துமாரியின் லீலைகளை தாங்க இயலாமல் குடும்பத்தினரே அவரை கொலை செய்தனரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவமானது திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.