திருமணமான 40 நாட்களில் அந்த இடத்தில் பயங்கர வலி! புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு! அதிர்ச்சியில் கணவன்!

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் எதிர்பாராவிதமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிங்காரப்பேட்டை என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு உள்ள நல்லவன்பட்டி புதூர் என்னும் கிராமம் உள்ளது. அய்யாதுரை 25 வயது இளைஞர் இந்த பகுதியை சேர்ந்தவராவார்.

சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பகுதியை சேர்ந்தவர் நந்தினி. இவருடைய வயது 20. நந்தினியின் பெற்றோர் நந்தினியை அய்யாதுரைக்கு 40 நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்தனர். நந்தினிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. பல்வேறு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றும் வயிற்று வலியானது குணமடையவில்லை. 

கடந்த சில தினங்களாகவே அவர்  மிகவும் சோகமுற்று காணப்பட்டு வந்தார். இந்நிலையில் நந்தினி நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது தன் சேலையை மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்‌. அவர் தூக்கில் தொங்குவதை கண்ட கணவர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். நிகழ்ந்த சம்பவத்தை அப்பகுதி காவல்துறையினரிடம் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நந்தினியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமான 40 நாட்களுக்குள் பெண் இறந்துள்ளதால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆர்.டி.ஒ, அய்யாதுரை மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.