காதலனுடன் ஒரே ரூம்! திடீரென ஆடைகள் இல்லாமல் வெளியே ஓடி வந்து இளம் பெண் செய்த விபரீதம்! அரண்டு போன ஊழியர்கள்!

நிர்வாணமாக ஹோட்டல் அறையை விட்டு வெளியே வந்த பெண் அபாய ஒலியை இயக்கிய சம்பவமானது பிரிட்டன் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்டன் நாட்டின் தலைநகர் லண்டன். லண்டனில் கிரிஸ் என்பவரும், ஹார்வே என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். அவர்கள் அங்குள்ள பெத்னல் கிரீன் என்னும் இடத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற ஹோட்டலுக்கு டேட்டிங்க்கு சென்றனர். 

இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தனர். அப்போது அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளனர். ஹார்வே கழிப்பறைக்கு செல்வதாக நினைத்து அறையின் கதவை திறந்துள்ளார். அறையை விட்டு அவர் நிர்வாணமாக வெளியே வந்தார். வெளியே வந்தவுடன் அக்சஸ் கார்டு இல்லாததால் அவரால் அறைக்குள் செல்ல இயலவில்லை. செய்வதறியாது அருகில் இருந்த தீப்பிடிப்பு அபாய ஒலியை அமுக்கியுள்ளார்.

இதனால் ஹோட்டல் முழுவதும் அபாய ஒலி கேட்டது. ஓட்டலில் தங்கி இருந்தோர் அதிர்ச்சி அடைந்து வெளியேறினர். அப்போது அந்தப் பெண் நிர்வாணமாக நின்று கொண்டிருப்பதைக் கண்டு முகம் சுளித்தனர். பின்னர் நிறைய பேர் ஹோட்டலை விட்டு வெளியேறினர்.

சம்பவங்கள் நிகழ்ந்து முடிந்து அறையை காலி செய்யும் போது காதல் ஜோடியின் பில்லில் 1080 பவுண்டுகள் பதிவாகியிருந்தன. இதுகுறித்து கிரிஸ் கேட்டபோது அபாய ஒலியை தேவையில்லாமல் எழுப்பியதால் ஆயிரம் பவுண்டுகள் அபராதம் என்று ஹோட்டல் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த டிரூஸ் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அங்கு வைத்திருந்த கணினியை பிடுங்கி உடைத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நடந்ததை விசாரித்து மேலும் 90 பவுண்டுகள் அபராதம் விதித்து சென்றனர்.

இந்த சம்பவமானது பிரிட்டன் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.