ரயில் பயணம்! கழுத்து, கையில் இளம் பெண்ணை கடித்துக்குதறிய சக பயணி! அதிர்ச்சி சம்பவம்!

ஓடும் ரயிலில் ஒரு பெண் பயணியை மற்றொரு பெண் அடித்து துன்புறுத்திய சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மும்பை மாநகரில் 16-ஆம் தேதியன்று மாலையில் இளம் பெண்ணொருவர் லோயர் பரேல் ரயில் நிலையத்திலிருந்து தாதர் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ரயிலின் முனையில் பயணித்து கொண்டிருந்தார். லேசாக இடித்து அதற்காக இந்த பெண் அருகில் இருந்த மற்றொரு பெண் மிகவும் கோபம் அடைந்துள்ளார். 

இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டன. வாக்குவாதங்கள் முற்றியதால் முன்னே நின்று கொண்டிருந்த பெண் தன்னை அடித்த பெண்ணின் கைகளையும், உதட்டையும் கீறியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கசிய தொடங்கியது.

அதன் பின்னரும் அந்த பெண் பாதிக்கப்பட்ட பெண்ணை விடாமல் தாக்கியுள்ளார். மேலும்அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கப்போவதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியபோது, தாக்குதலில் ஈடுபட்ட பெண் அவரை மேலும் துன்புறுத்தி கதவருகே தள்ளிவிட்டார். மேலும் அவருடைய கைகளை மிருகம் போன்று கடித்து வைத்துள்ளார்.

சூழ்ந்திருந்த பயணிகள் அவரை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து விலக வைத்தனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் அவருடைய தங்க மோதிரத்தை விழுந்தார். ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவரால் கண்டுபிடிக்க இயலவில்லை.

சூழ்ந்திருந்த பயணிகள் அந்த அராஜக பெண்ணை புகைப்படம் எடுக்குமாறு கூறினர். அப்போது அந்தப் பெண் விறுவிறு என்று மாஹிம் ரயில் நிலையத்தில் இறங்கி சென்று விட்டார். பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக தன்னுடைய கணவரை அழைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பாந்திரா காவல்நிலையத்தில் தம்பதியினர் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்த தொடங்கினர். மேலும் உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க ஏற்பாடு செய்தனர். 

சமூகவலைத்தளங்களின் மூலமாகவும் சிசிடிவி கேமரா பதிவுகளின் மூலமாகவும் காவல்துறையினர் அந்த பெண்ணை 21-ஆம் தேதியன்று அடையாளம் கண்டனர். ஆனால் அவருடைய வீட்டிற்கு சென்றபோது அவர் தலைமறைவாகி விட்டார்.

மறுநாள் காலையில் அவருடைய தந்தை தன்னுடைய வழக்கறிஞருடன் காவல் நிலையத்திற்கு வந்தார். ஆனால் காவல்துறையினர் முதலில் பெண்ணை அழைத்து வருமாறு உறுதியாக கூறிவிட்டனர். அராஜகம் செய்த பெண்ணின் தந்தை சமூகநல தொழிலாளி ஆவார்.

இந்த சம்பவமானது மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.