காதல் கணவனை கழட்டிவிட்டு டிக்டாக் கள்ளக் காதலனுடன் உல்லாசம்! நெல்லை இளம் பெண்ணால் மகனுக்கு நேர்ந்த விபரீதம்!

கணவனை பிரிந்த பெண் கள்ளக்காதலனுடன் தான் பெற்ற மகனை அடித்து துன்புறுத்தியுள்ள சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சியில் திவ்யா என்பவர் வசித்து வருகிறார். அவருடைய கணவரின் பெயர் மகேஷ். மகேஷ் திவ்யா இருவரும் ஒருமனதாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2008-ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு 2013-ஆம் ஆண்டில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

காலம் செல்ல செல்ல இருவருக்கும் பல்வேறு தகராறுகள் ஏற்பட்டன. இந்நிலையில், 2017-ஆம் ஆண்டில் தகராறுகள் முற்றியதால் திவ்யா மகேஷை பிரிந்து வாழ முடிவெடுத்தார். மேலும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த திருச்சி குடும்பநல நீதிமன்றமானது தள்ளுபடி செய்தது. பின்னர் இருவரையும் சேர்ந்து வாழுமாறு கூறியது. ஆனால் தீர்ப்பையும் மீறி வித்யா தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் திவ்யாவிற்கு அன்சாரி என்னும் இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டது. ஸ்ம்யூல், மற்றும் பேஸ்புக் மூலம் இருவரும் அறிமுகமாகி கொண்டனர். நெருக்கம் அதிகரித்து பின்னர் கள்ளக்காதலாக மாறியது. பல்வேறு இடங்களில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அன்சாரியும், திவ்யாவும் அந்த ஆண் குழந்தையை அடித்து துன்புறுத்தியுள்ளனர். 

மகேஷ் தன் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு நெல்லை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மகேஷுக்கு ஆதரவாக தீர்ப்பை வழங்கினார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தன் மகனை பார்த்து வருகிறார்.

திவ்யாவின் பெற்றோர் குழந்தை துன்பப்படுவதை மகேஷிடம் எடுத்துரைத்துள்ளனர். இதனை தொடர்ந்து மகேஷ் விசாரித்ததில் குழந்தையின் உடம்பில் பல்வேறு இடங்களில் தழும்புகள் இருந்துள்ளன. இந்த செய்தியானது பள்ளித் தலைமையாசிரியர் வரை சென்றுள்ளது. திருச்சி மாநகர காவல் நிலையத்தில் தன் மனைவி மீதும் அன்சாரி மீதும் மகேஷ் வழக்கு தொடர்ந்துள்ளார்.