சகோதரியை நடுரோட்டில் வைத்து சகோதரர்கள் செய்த விபரீத செயல்! அதிர வைக்கும் காரணம்! வைரல் வீடியோ!

பெண்ணொருவர் பட்டியலின ஆணுடன் வெளியே சுற்றியதற்காக அவருடைய சகோதரர்கள் அவரை அடித்து துன்புறுத்திய சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மத்தியப்பிரதேச மாநிலத்தில் வசித்து வரும் பெண்ணொருவர் பட்டியலின ஆணுடன் காதல் வயப்பட்டார். அந்த இளைஞனுடன் பல்வேறு இடங்களில் சுற்றி திறிந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் திடீரென்று அவருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பெண்னை காணாது அவரின் பெற்றோர்கள் மற்றும் சகோதரர்கள் பல இடங்களில் தேடி வந்துள்ளனர். எங்கும் கிடைக்காததால் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் புகாரளித்துள்ளனர். வலை வீசி காவல்துறையினர் அந்த பெண்ணை தேடினர். இறுதியில் அந்த பெண்ணை கண்டுபிடித்து அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர், அவரின் சகோதரர்கள் மற்றும் பெற்றோர்கள் அவருக்கு அவர்கள் இனத்தில் சேர்ந்த ஆணுடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். ஆனால் அந்த பெண் அதற்கு கடுமையாக மறுத்துள்ளார். மேலும் அந்த பட்டியலின ஆணுடன் தன்னை திருமணம் செய்து வைக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதனால் கடும் கோபமடைந்த இவரின் சகோதரர்கள் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளனர். மேலும் தாங்கள் பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்கள் கண்டனர். ஆனால் அவர்களால் அந்தப் பெண்ணுக்கு எந்தவித உதவியும் செய்து தர இயலவில்லை.

நீளமான குச்சிகள் மற்றும் பல்வேறு ஆயுதங்கள் கொண்டு அந்த பெண்னை தாக்கியுள்ளனர். இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பரவியது. உடனே அந்த பகுதி காவல் துறையினர் பெண்ணின் 4 சகோதரர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவமானது மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.