கணவனுக்கு ஆண்மை இல்லை..! குழந்தை பெற்றுக் கொள்ள கணவனின் அண்ணன் உதவியை நாடிய மனைவி! அதிர்ச்சி சம்பவம்!

கணவரின் அண்ணனிடம் உயிரணு தானம் கேட்ட பெண்ணுக்கு அவமானம் நேர்ந்த சம்பவமானது அமெரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் வாழ்ந்து வரும் பெண் ஒருவருக்கு அவருடைய கணவரால் குழந்தையை கொடுப்பதற்கு வாய்ப்பில்லை என்பதை அறிந்து மனமுடைந்தார். பின்னர் யாரிடமாவது உயிரணு தானத்தைப் பெற்று குழந்தையை பெற்றுக்கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளார்.

யாரிடமாவது பெறுவதற்கு பதிலாக கணவனின் சொந்த அண்ணனான எரிக் என்பவரிடமிருந்து உயிரணு தானத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளார். மேலும் எரிக் தன்னுடைய கல்லூரி காலத்திலேயே உயிரணு தானம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எரிக்கிடம் சம்பந்தப்பட்ட பெண் உயிரணு தானம் செய்வது குறித்து கேட்டுள்ளார். அதற்கு எரிக் மெயில் மூலம் பதிலளித்தார். அதாவது "என்னுடைய உயிரணுவை தானம் கேட்பவர்கள் நல்ல வசதி படைத்தவர்களாக இருக்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பு இருந்தால்கூட ஒப்புக்கொள்ள மாட்டேன்.

நிச்சயம் தனி வீடு இருந்தே ஆகவேண்டும். என்னுடைய குழந்தை பிறந்து வளரும் போது நல்ல வசதி படைத்த குடும்பத்தில் தான் வளரவேண்டும்" என்று கூறியிருந்தார். "உயிரணு தானம் தரமாட்டேன் என்று கூறியிருந்தாலும் பரவாயில்லை. அவர் எங்களை பெரிதும் அவமானப்படுத்தி விட்டார்‌. இதனால் நாங்கள் மனமுடைந்துள்ளோம்" என்று சம்பந்தப்பட்ட பெண் கூறினார்.

இருப்பினும் குழந்தை வேண்டும் என்பதற்காக தன்னுடைய அண்ணனின் கோரிக்கைகளில் ஏற்றுக்கொள்ளலாம் சொந்த கணவரே கூறியவுடன், பாதிக்கப்பட்ட பெண் மேலும் கோபமடைந்துள்ளார். இந்த சம்பவமானது அமெரிக்காவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.