வயிற்று வலி என ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன இளம் பெண்! 20 நிமிடங்களில் பிறந்த 8வது குழந்தை! மிரண்ட மருத்துவர்கள்!

சிறுநீரகத்தில் அதிகமான வலி இருந்ததால் மருத்துவமனைக்கு சென்ற பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ள சம்பவமானது பிரிட்டன் நாட்டில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்டன் நாட்டில் செல்டென்ஹாம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியின் சாஃப்ரான் என்ற 33 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே 7 குழந்தைகள் பிறந்துள்ளன. இவருக்கு திடீரென்று ஒரு நாள் அடிவயிற்றில் இருந்து வலி ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் திடீரென்று அவருக்கு சிறுநீரகத்தில் வலி ஏற்பட்டுள்ளது. சிறுநீரகத்தில் கல் இருந்தால் வலி அதிகமாகியுள்ளது என்று எண்ணியுள்ளார். மேலும் தன் கணவரான ஜோஷிடம் மருத்துவமனைக்கு செல்வதாக கூறியுள்ளார்.

குடல்வால் அழற்சியாக இருக்கக்கூடும் என்றும் சாஃப்ரான் எண்ணினார். மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு செவிலியர் ஒருவர் ஸ்கேன் செய்துள்ளார். அப்போது அடிவயிற்றில் குழந்தையுள்ளதை செவிலியர் கண்டறிந்துள்ளார். அதன் பின்னர் தான் சாஃப்ரானுக்கு ஏற்பட்டது பிரசவ வலி என்பதனை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

20 நிமிடத்தில் பிரசவம் செய்த பின்னர் மருத்துவர்கள் சாஃப்ரானின் வயிற்றிலிருந்து அழகான ஆண் குழந்தையை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஜோஸ் மருத்துவமனை முழுவதும் தன் மனைவியை காணவில்லை என்று தேடியுள்ளார். பின்னர் பிரசவ வார்டில் தன் மனைவி அழகான ஆண் குழந்தையுடன் இருப்பதை கண்ட மகிழ்ச்சியில் குதித்தார்.

முன்பு பிறந்த அனைத்து குழந்தைகளும் அறுவை சிகிச்சையின் மூலம் தான் பிறந்துள்ளன என்பதால் தான் மிகவும் பயந்ததாக சாஃப்ரான் கூறியுள்ளார். பிரசவ வலியை அனுபவிக்காமல் அழகான ஆண் குழந்தையை தாய் ஒருவர் ஈன்றெடுத்த சம்பவமானது பிரிட்டன் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.