பலமுறை அழைத்தும் நேரில் வர மறுத்த காதலன்..! ஏக்கத்தில் பெண் போலீஸ் எடுத்த விபரீத முடிவு! அதிர்ச்சி காரணம்!

பிறந்தநாளன்று கேக் வெட்டுவதற்காக காதலன் வராத காரணத்தினால் காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரும்புப்பாதை காவல் நிலைய ஆய்வாளராக சரண்யா என்ற பெண் பணியாற்றி வருகிறார். இவர் அயனாவரத்திலுள்ள பனந்தோப்பு ரயில்வே காலனி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் இவர் பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று காலை தன்னுடைய தடுப்பு பணியை முடித்த பின்னர் மீண்டும் குடியிருப்புக்கு சென்றுள்ளார். நேற்று இவருடைய காதலரான ஏழுமலைக்கு பிறந்தநாள். 

பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சரண்யா கேக் வாங்கி வந்துள்ளார். பின்னர் ஏழுமலையை தன்னுடைய காவலர் குடியிருப்புக்கு வருமாறு கூறியுள்ளார். ஆனால் ஏழுமலை வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டுள்ளார். 

மன அழுத்தம் அதிகமானதால் சரண்யா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருடைய சடலம் மின்விசிறியில் தொங்கி கொண்டிருந்ததை கண்ட தோழி ராஜேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து சரண்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது அயனாவரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.