ஆசை காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம்! நிறுத்துவதற்கு பெண் காவலர் செய்த விபரீத செயல்!

ஆசை ஆசையாக காதலித்த காதலன் தன்னை விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதை அறிந்து அந்த திருமணத்தை நிறுத்த பெண் காவலர் ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.


கடலூர் மாவட்டம் பெரியகாட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வி. 23 வயதாகும் இவர் திருச்சி கடந்த 2017ஆம் ஆண்டு சிறைத்துறையில் சேர்ந்து 2018ஆம் ஆண்டு முதல் திருச்சி பெண்கள் சிறையில் காவலராக பணியாற்றி வருகிறார்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கி தினமும் பணிக்கு சென்று வந்தார் செந்தமிழ்செல்வி. நேற்று இரவு செந்தமிழ்செல்வி பணிக்கு வரவில்லை. இது குறித்து கேட்டறிய அவரது செல்போனில் தொடர்பு கொண்ட போதும் போன் எடுக்கப்படவில்லை.

என்ன ஆனார் என்பது குறித்து கேட்டறிய சிறைகாவலர்கள் சிலர் அவர் குடியிருந்த காவலர் குடியிருப்பு சென்றுள்ளனர். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பலமுறை தட்டியும் கதவு திறக்கபடவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த சிறை காவலர்கள் கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்த பொது செந்தமிழ்செல்வி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் உடலானது திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிறைதுறையை சேர்ந்த ஒருவரை செந்தமிழ்செல்வி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அவரிடம் திருமணம் குறித்து பேசிய போது, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

வரும் 6ம் தேதி அவருக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் மனமுடைந்த செந்தமிழ்செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

   செந்தமிழ் செல்வியுடன் அந்த காவலர் நீண்ட நாட்கள் பழகியுள்ளார். காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி செந்தமிழ் செல்வி தனது மனதை காதலனிடம் பறி கொடுத்துள்ளார்.

   மேலும் விரைவில் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி செந்தமிழ் செல்வி வலியுறுத்தியுள்ளார். ஆனால் அந்த காவலரோ திருமணம் என்றதும் பின்வாங்கியுள்ளார். அதுமட்டும் இன்றி வேறு ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.

   இந்த நிலையில் தனது காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் 6ந் தேதி திருச்சியி திருமணம் நடைபெற உள்ள தகவலை அறிந்து செந்தமிழ் செல்வி கோபம் அடைந்துள்ளார். இதனால் அந்த திருமணத்தை செய்யக்கூடாது தன்னை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று செந்தமிழ்செல்வி கெஞ்சியுள்ளார்.

  ஆனால் அதனை அந்த காவலர் பொருட்படுத்தவில்லை. இதனால் அவர்கள் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்த செந்தமிழ் செல்வி தனது உயிரையே மாய்த்துக் கொண்டுள்ளார். தான் தற்கொலை செய்து கொண்டால் தனது காதலனை அந்த பெண் திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்று இந்த விபரீத முடிவை செந்தமிழ் செல்வி எடுத்துள்ளார்.