ஒரே வீட்டில் 2 மனைவிகள்! கணவனுக்கு 2 பேரும் சேர்ந்து கொடுத்த விவகாரமான மாத்திரை! பிறகு அரங்கேறிய திடுக் சம்பவம்!

மதுவை மறப்பதற்காக மாத்திரை கொடுத்த மனைவியை கணவர் அடித்து கொன்ற சம்பவமானது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் ரமேஷ் என்பவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். ஒரு மகனும், மகளும் இவர்களுக்கு உள்ளனர். அனைவரும் ஒரே வீட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர்.

இதனிடையே ரமேஷுக்கு அதிக அளவில் குடிப்பழக்கம் உள்ளது. தினமும் குடித்துவிட்டு 2 மனைவிகளிடம் சண்டை போடுவதையே வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் 2 மனைவிகளும் கடுமையாக அதிருப்தி அடைந்தனர்.  

கணவரின் மதுபழக்கத்தை ஒழிக்க வேண்டுமென்று 2 மனைவிகளின் திட்டமிட்டனர். குடியை மறப்பதற்கான மாத்திரையை வாங்கிவந்து கணவரிடம் கொடுத்தனர். அதனை ரமேஷுக்கு தெரியாமல் கொடுத்தனர். மாத்திரையை சாப்பிட்ட ரமேஷ் மயக்கமடைந்தார்.

மயக்கம் தெளிந்த பின்னர் மனைவிகளிடம் தனக்கு எண்ண கொடுத்தீர்கள் என்று வினவியுள்ளார். அதற்கு மனைவிகள் குடியை மறப்பதற்கான மாத்திரையை கொடுப்பதாக கூறினர். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் அருகிலிருந்த உருட்டு கட்டையால் 2 பேரையும் சரமாரியாக அடித்துள்ளார்.

சம்பவ இடத்திலேயே முதல் மனைவி இறந்து போனார். வலி தாங்க முடியாமல் அலறிய 2-வது மனைவியை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் முதல் மனைவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரமேஷ் முதல் மனைவியை கொலை செய்ததற்காக காவல்நிலையத்தில் சரணடைந்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.