ஒரே சிக்னல் ஐந்தே நிமிடம் 2 லட்சம் ரூபாய் அபராதம் வசூல். சென்னை போக்குவரத்து போலீஸ் சாதனை

வெறும் ஐந்து நிமிடங்களில் 2 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலித்து பெரும் சாதனை படைத்துள்ளனர் சென்னை மாநகர போக்குவரத்து போலீஸார்.


சென்னை நந்தனம் போக்குவரத்து சிக்னல் அருகே நடைபெற்ற போக்குவரத்து நடவடிக்கைகள் மூலம். அந்த ஒரு இடத்தில் மட்டுமே் இந்த வசூல் தொகையை வசூலித்துள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் கூட சிறந்த வணிகர் ஒருவரால் செய்ய முடியாத காரியத்தை சென்னை போக்குவரத்து காவல்துறை செய்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அபிரிதமான இந்த அபராத வசூல் ராஜா செயல்பாடுகள், அரசாங்கத்தால் பாராட்டப்படக் கூடியதாக போக்குவரத்து துறை நினைத்திருந்தால். மக்களை பொறுத்தவரை இந்நிகழ்வு மிகவும் வருத்தப்படக்கூடிய ஒன்று என்றே அறியமுடிகிறது. 

ஏனெனில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் போக்குவரத்து நடைமுறை திட்டத்தின்படி தான் இந்த அபராத தொகையை வசூலிக்கபட்டதாக போக்குவரத்து துறை போலீசார் கூறிகின்றனர். தரமான சாலைகள் இல்லாமல், பெட்ரோல் விலை உயர்வு, பொருளாதார சரிவு, தொடர் வேலையின்மை என, நாட்டு மக்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கையை நினைத்து நிர்க்கதியாகி இருக்கின்ற இந்த சூழலில்.! 

சாலையில் பயணிக்கும் ஒவ்வொருவரையும் வலுக்கட்டாயமாக பிடித்து இந்த ஒரு அபராத தொகையை வசூலித்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. மேலும். போக்குவரத்து காவலர்களிடையே விவாதங்கள் செய்ய நேரிடும்போது, அந்த வாகன ஓட்டி காவல்துறையினரால் மிகவும் அபாய கட்டத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார் என்பதும் நாடறிந்த விஷயம் தான். 

திருச்சியில் ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக காவல்துறை அதிகாரி ஒருவரால் ஒரு கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டாலும். சென்னை கேகே நகரில் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணித்த குற்றத்திற்காக போக்குவரத்து காவலர் பிரம்பால் அடித்து ஒரு இளைஞர் ஒருவர் துடிதுடித்து மரணம் அடைந்ததும்.

மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக மன உளைச்சலுக்கு ஆளான ஒரு நபர் சென்னை மகாபலிபுரம் சாலையில், காவல் அதிகாரிகள் முன்னிலையிலேயே பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்த மரணித்ததும். வாகன ஓட்டிகளின் மனதில் ஆறாத ரணமாக ஆகிவிட்டது. இந்த சூழலில் தான் போக்குவரத்து போலீசாரின் இந்த கட்டுப்பாடு பெரும் தலைவலியாக போகிவிட்டது மாநகர சாலைகளில் பயணிக்கும் மக்களுக்கு.

கடந்த ஓராண்டாக கட்டாய ஹெல்மெட் சட்டத்தினை பற்றி திரும்பத் திரும்ப உத்தரவு போட்டு கொண்டிருக்கும் சென்னை உயர்நீதிமன்றம், மற்ற மாநிலங்களில் இதுபோன்ற ஒரு கட்டாய சட்டத்தை இயற்ற சிறிதளவேனும் அழுத்தம் கொடுக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். மத்திய அரசின் அனைத்து சட்டங்களும் தமிழகத்தில் திணிக்கப்படுகிறது என்பது மட்டுமே மறுக்க முடியாத உண்மையாகும். 

சென்னை காவல்துறை 5 நிமிடங்களில் இரண்டு லட்ச ரூபாய் வசூல் செய்தது என்பதை விட இரண்டு லட்சம் ரூபாய் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும்.. ஆக நிதர்சனமான உண்மை இதுதான்.

கட்டாய ஹெல்மெட் சட்டம் இயற்ற சொல்லி வற்புறுத்தும் உயர்நீதிமன்றம், சீரான சாலைகளை போடச்சொல்லி அரசிடம் ஏன் நிர்பந்திக்க விலை என மனதுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டே போகின்றனர் நிர்க்கதியான மக்கள். நீதிமன்றமே நிர்பந்தித்தாலும். அதை செயல்படுத்த முடியாத நிலையில் தான் தமிழக அரசும் இப்போது உள்ளது. 

உதாரணமாக கடந்த 4 ஆண்டுகளாக உயர் நீதிமன்றம் பலமுறை எச்சரித்தும், உள்ளாட்சித் தேர்தலை நடத்த காலம் தாழ்த்திக் கொண்டு வருவதையே கருத்தில் கொள்ளலாம். மேலும் சென்னையின் சாலைகள் ஆங்காங்கே குண்டும் குழியுமாக மலைப்பாங்கான இடம் போல மாறி உள்ளதையும்.

போக்குவரத்து சிக்னல்கள் சரிவர வேலை செய்யாததும், சென்னையில் விதிமீறல்கள் அதிகமாக நடக்க ஒரு காரணமாக உள்ளது. இதுபற்றி எவரொருவரேனும் என்னும் புகார் அளிக்கும் பட்சத்தில், புகார் அளித்த நபரையே மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகின்றனர் இன்றைய ஆளும் கட்சியினரும் அரசு ஊழியர்களும். 

ஆனால் இந்த திட்டத்தினை சரிவர சரிவர செயல்படுத்த வேண்டிய அரசு நிர்வாகமும் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இதனால் மக்கள் இன்னும் என்னவெல்லாம் பிரச்சினையை சந்திக்க போகிறார்களோ என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.