நள்ளிரவு 1 மணி..! மொட்டை மாடி! தூக்கத்தில் புரண்ட சமையல் மாஸ்டருக்கு ஏற்பட்ட பயங்கரம்! சென்னை திகுதிகு!

4-வது மாடியிலிருந்து குடிபோதையில் மதுபானக்கடை சமையல்காரர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை மண்ணடியில் ஜாஃபர் சாரங்கன் தெரு அமைந்துள்ளது. இந்த தெருவில் ஒரு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இதற்கருகே ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மதுபானக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் பாபு என்பவர் சமையல்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய வயது 45. இவர் நாள் முழுவதும் சமையல் பணிகள் செய்துவிட்டு இரவில் மது அருந்திவிட்டு அதே கடையின் மொட்டை மாடியில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

நேற்றிரவு நன்றாக மது அருந்திவிட்டு இவர் மொட்டை மாடியில் தூங்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மதுபோதையில் பாபு 4-வது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். சம்பவயிடத்திலேயே பாபு உயிரிழந்தார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் பாபுவை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் சந்தேக மரணம் என்று ரீதியில் விசாரணையை தொடங்கியுள்ளனர். 

இந்த சம்பவமானது மண்ணடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.