போலீஸ் ஆகாமல் விடமாட்டேன்! விடா முயற்சியுடன் பரீட்சை எழுதிய திருநங்கை கவி! உருக வைக்கும் காரணம்!

திருநங்கை ஒருவர் காவல்துறை தேர்வை திறம்பட எழுதிய சம்பவமானது பொதுமக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜபாண்டி. 10 வருடங்களுக்கு முன்னர் திருநங்கையாக மாறிய இவர் தன் பெயரை கவி என்று மாற்றிக்கொண்டார். திருப்பூரில் நெருப்பெரிச்சல் என்னும் பகுதியில் வசித்து வருகிறார். 

நேற்று 2-ம் நிலை காவலர்கள், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படையினர் ஆகியோருக்கான தேர்வு நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் ஜெய்வாபாய் பள்ளியிலும், குமரன் கல்லூரியிலும் இந்த தேர்வு நடைபெற்றது. மொத்தம் 3,306 ஆண்களும், 478 பெண்களும் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் விண்ணப்பித்தவர்களில் 724 பேர் தேர்வு எழுதவில்லை.

இந்நிலையில் திருநங்கை கவி தேர்வு எழுதுவதற்காக குமரன் கல்லூரிக்கு சென்றார் அவருடைய ஆவணங்களை காவல்துறையினர் பரிசோதித்தபோது ஆதார் கார்டு பெயர் மாற்றப்பட்டு இருந்தது. அதற்கான ஆதாரத்தை காண்பித்த பின்னர் கவி தேர்வெழுத அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து கவி கூறுகையில், சிறு வயதிலிருந்தே எனக்கு காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையுள்ளது. என்னை போன்ற திருநங்கை ஏற்கனவே சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அவரை முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டு வருகிறேன். மக்கள் பணி செய்வதற்காக நான் இந்த தேர்வை எழுதியுள்ளேன்" என்று கூறினார்.

கவி தேர்வில் வெற்றி பெற எங்களின் மனமார வாழ்த்துக்கள்.