கடந்த மார்ச் மாதம் தொடங்கி 8வது கட்டமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிக்கூடம், நீச்சல் குளம், போக்குவரத்து போன்றவற்றில் மட்டும் கட்டுப்பாடு நிலவுகிறது.
ஊரடங்கு முழுமையாக விலக்கப்படுமா..? முதல்வர் எடப்பாடி பழனிசாமி 29ம் தேதி அறிவிப்பு.

இந்த நிலையில் அக்டோபர் 1-ந்தேதி முதல் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம் என்றும், ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாணவர்கள் வருகைதர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுள்ளது. இந்த நிலையில் 8-ம் கட்ட ஊரடங்கு வருகிற 30-ந்தேதி முடிவடைகிறது.
அடுத்த கட்டமாக ஊரடங்கை மேலும் நீட்டிப்பதாக, வேண்டாமா? என்பது பற்றியும், தளர்வுகளை அறிவிப்பது பற்றியும் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். அதன்படி, வருகிற 29-ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
முன்னதாக மாவட்ட கலெக்டர்களுடனும் அவர் ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து அன்றைய தினமே அடுத்த மாதத்திற்கான ஊரடங்கு கட்ட்டுப்பாடு குறித்த தகவல் வெளியிடப்படும் என்று தெரியவந்துள்ளது.