ராகுல், தினேஷ் கார்த்திக்கை விட நான் தான் பெஸ்ட்! விஜய் சங்கர் அதிரடி சவால்!

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான விஜய் சங்கர் தன்னுடைய ஆட்டத்தினால் தினேஷ் கார்த்திக், கே.எல் ராகுல் ஆகியோரை தாண்டி செல்ல இயலும் என்று கூறியுள்ளது விளையாட்டு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஆல்-ரவுண்டரான விஜய் சங்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தன்னுடைய பொழுது போக்காக தான் விளையாடும் வீடியோ கேம் பற்றி அவர் அதில் கூறியுள்ளார். இந்த செய்தியினை பிசிசிஐ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

விஜய் சங்கர் தன்னுடைய பொழுதுபோக்கான வீடியோ கேம் பற்றி கூறியுள்ளார். மேலும் அந்த விளையாட்டினை தினேஷ் கார்த்திக் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரும் விளையாடுவதாகவும், ஆனால் தாங்கள் மூவருள் சிறப்பாக விளையாடுவதாக அந்த வீடியோவில் கூறியுள்ளார். 

நேற்று விஜய் ஷங்கருக்கு பும்ரா வீசிய பந்தில் காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாயின. அந்த செய்தி இந்திய ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆயினும் இந்திய அணியின் மருத்துவர்கள், லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பயப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை என்றும் அறிக்கை வெளியிட்டனர்.

விஜய் சங்கர் பூரண நலம் பெற்று இந்திய அணிக்காக நன்றாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.