ஜூன் 1ந் தேதி முதல் ஊரடங்கு விலக்கப்படுமா? பேருந்துகள் ஓடுமா? எடப்பாடியாரின் பதில்..!

31-ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்வுகள் இருக்குமா என்ற கேள்விக்கு தமிழக முதலமைச்சர் அளித்துள்ள பதிலானது ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


நேற்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் கூட்ட அரங்கத்தில் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்றதற்கு பிறகு அவர் கூறியதாவது. 

"கொரோனா வைரஸ் பரவியதை நாங்கள் தடுக்கவில்லை என்று எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். தடுப்பு பணியில் ஈடுபடுவதில் முதல் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. மருத்துவர்களும் படித்தவர்களும் அரசாங்கத்தை பாராட்டி வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை உரிய முறையில் கண்டுபிடிக்கின்றோம்.

அவர்களுக்கு பாதுகாப்புடன் உரிய வசதிகளை செய்து கொடுத்து நோய் தாக்குதலிலிருந்து மீண்டு வருவதற்கு உதவுகிறோம். நீண்ட பிறகு அவர்களை வீட்டிற்கு கொண்டுபோய் சேர்க்கிறோம். இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில்தான் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதைவிட வேறு எந்த அரசாங்கம் செய்துவிடும்.

மத்திய அரசிடமிருந்து நிதியை கேட்டு வருகிறோம். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தருகின்றனர். ஆனால் போதுமான அளவிற்கு தரவில்லை. சென்னையில் எண்ணமும் சமூக பரவல் ஏற்படவில்லை. சின்னஞ்சிறு தெருக்கள், குறுகிய தெருக்கள் ஆகியன இருப்பதால் தொற்று வேகமாக பரவி வருகிறது. 31-ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்துவது குறித்து மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றுவோம். அது மட்டுமின்றி நம்முடைய மருத்துவ குழுவினரின் ஆலோசனை படியும் நடக்கவுள்ளோம். 

வேளாண்மை துறையில் முழுவதுமாக தளர்வுகளை அளித்துவிட்டோம். தொழிற்சாலைகளில் கொஞ்சம் கொஞ்சமாக வழிகாட்டுதலுக்கு உட்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால் வெகு விரைவில் கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகம் மாறிய பிறகு அனைத்து விதமான தளர்வுகள் மேற்கொள்ளப்படுவதற்கு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது" என்று கூறியுள்ளார்.