பசுவின் சாணத்தில் மின்னல் பட்டால் தங்கமாக மாறுமா? ஒரு பரபரப்பு ரிப்போர்ட்!

நம்ம ஊர்ல நிறைய புத்திசாலிங்க இருக்காங்க அதுல சிலர் சொன்னது செய்தி தான் பசு மாட்டின் சாணத்தின் மீது மின்னல் பட்டால் தங்கமா மாறும் என்றெல்லாம் சொல்லி இருப்பாங்க,


நம்மில் சிலர் அதனை நம்பியும் இருப்பாங்க. ஆனா அது உண்மையா என்பதை பார்க்கலாம் அறிவியல் பூர்வமாக!

அறிவோம் அறிவியலை:

அறிவியல் ரீதியாக தங்கம் என்பது ஒரு தனிமம். தங்கத்தின் உட்கருவில் 79 புரோட்டான்கள் மற்றும் 118 நியூட்ரான்கள் உள்ளன. ஆகையினால் பசு சாணம் என்பது செரிக்கப்பட்ட இலை, தழைகளின் கலவை அதில் பெருமளவு கரிமப்பொருட்கள் அதவாவது கார்பன் மட்டுமே உள்ளது.

கார்பனில் உட்கருவில் 6 புரோட்டான்களும், 6 நியூட்ரான்களும் மட்டுமே அமைந்துள்ளது. இந்த கார்பன் தங்கமாக மாற கூடுதலாக 73 புரோட்டான்களும், 112 நியூட்ரான்களும் தேவை.

மின்னல் என்பது மின்சாரம் தானே தவிர, தங்க தனிமதிற்கு தேவையான புரோட்டான்களும், நியூட்ரான்களை வழங்கும் அணுக்கள் அல்ல. எனவே மாட்டின் சாணத்தின் மீது இடி, மின்னல் வழியாக தங்கம் பெறமுடியாது என்பதை அறிவியல் வழியாக மட்டுமே பெற முடியும்.

இனி அறிவியல் அறிவு இல்லாதவ்ர்கள், இயற்கையின் அறிவியலை இணைத்துத் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்.