நம்பி முந்தி விரிச்சேன் இப்போ 3 மாத கர்ப்பம்! ஆனால்..? 21 வயது மேலூர் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

திருமண ஆசைகாட்டி இளம் பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்ற முயன்ற இளைஞன் கைது செய்யப்பட்டிருப்பது மேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் மேலூர் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கருகேயுள்ள தும்பைப்பட்டி காலனி என்னும் இடத்தை சேர்ந்ததவர் திவ்யபாரதி திவ்யபாரதியின் வயது 21. இவருடைய உறவினரான அஜித் என்ற 23 வயது இளைஞர் புதுப்பட்டி காலனியில் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் வீட்டிற்கு தெரியாமல் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி வந்துள்ளனர். நிச்சயமாக திருமணம் செய்து கொள்வதாக கூறி அஜித், திவ்யபாரதியுடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் திவ்யபாரதி கர்ப்பமானவுடன், அவரை சித்ரா என்ற உறவினரின் வீட்டில் அஜித் தங்க வைத்துள்ளார். 

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு திவ்யபாரதி கேட்டு வந்ததற்கு அஜித் பல காரணங்களை கூறி சமாளித்து வந்துள்ளார். இதனிடையே இந்த விவரங்கள் அஜீத்தின் வீட்டிற்கு தெரிய வந்துள்ளது. உடனடியாக அவர்கள் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த திவ்யபாரதி தான் 3 மாத கர்ப்பமாக இருப்பதாக அப்பகுதியிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். 

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தினர். புகாரில் உண்மை இருப்பதை உறுதிசெய்து கொண்ட அவர்கள், அஜித், தாய் பஞ்சு, தந்தை சின்னலேவு மற்றும் உறவினர் சித்ரா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது மேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.